*Blast விமர்சனம்*

ரொம்ப நாள் கழிச்சு, சீரியஸா ஒரு இடைவேளை ப்ளாக்! கைதட்டி, விசில் அடிச்சு, ரசிக்கிறார்கள்!. வாழ்த்துக்கள் குட்டி இயக்குனரே!
செமையான மேக்கிங்.
ஹீரோயின் இருக்குற மருந்து கடை சீன், வேற லெவல்.
படம் ஆரம்பிக்கும் போது ஒரு வழக்கமான குடும்ப படமாக துவங்குகிறது. ஆனால், ப்ரீத்தி முகுந்தன் வேலைக்குப் போக ஆரம்பித்ததும், படம் வேற பாதையில் பயணித்து வெற்றி பெறுகிறது.
அபிராமி கழுத்துக்கு வரும் கத்தி, அர்ஜுன் கிட்ட போன் வந்து உங்க வீட்ல டிவி சத்தம் அதிகமா இருக்குன்னு சொல்றது என பல காட்சிகள் அருமை. பெரும்பாலும் அனைத்து ஆக்சன் சீன்களும், பெண்களே செய்வது இன்னும் மிகச் சிறப்பு..
ஃபேமிலியோட பார்க்க வேண்டிய படம். கேரக்டர்கள் அதிகம் என்றாலும், தெளிவான திரைக்கதை!
வரும் வாரங்களில் தியேட்டர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்.
பெண்களுக்கான தற்காப்புக் கலை அவசியம் குறித்து, படம் சிறப்பாக சொல்லி இருக்கிறது. ஃபைட் மாஸ்டருக்கு பலத்த கைதட்டல்!
