*முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதி*

 

 

 

- Advertisement -

“ஒரே சந்திப்பில் பிடித்தமானவராக மாறிவிட்டார்!” – நெகிழ்ந்த விஜய் தேவரகொண்டா!

தமிழக முதலமைச்சர் விஜய்யை, தெலுங்கு நடிகரும் தேவரகொண்டாவும் அவரது மனைவியும் நடிகையுமான ராஷ்மிகா மந்தனாவும் சென்னையில் நேரில் சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் அவை கவனம் பெற்று வருகின்றன.

தங்களுடைய ‘ரணபாலி’ திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு விளம்பரப் பணிகளுக்காக சென்னை வந்திருந்தபோது இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. பிஸியான நாளாக இருந்தபோதிலும், தங்களை மிகுந்த அன்புடன் வரவேற்று உபசரித்ததாக விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், வாழ்க்கை, வேலை மற்றும் உலக நடப்புகள் குறித்து தளபதி விஜய் தங்களுடன் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டதாகவும், ஒரே ஒரு சந்திப்பிலேயே அவர் தனக்குப் பிடித்தமானவராக மாறிவிட்டதாகவும் விஜய் தேவரகொண்டா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். நடிகையாக இருந்தபோது ( வாரிசு ) தளபதி விஜய்யை வியந்து பார்த்ததாகவும், அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததிலிருந்து தற்போது முதலமைச்சராக அவரது பயணத்தைப் பார்ப்பதுவரை பெருமையாக இருப்பதாகவும் ராஷ்மிகா, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

சினிமாவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் தளபதி விஜய்யை, தற்போது முதலமைச்சராகவும் சந்தித்திருக்கும் இந்த நட்சத்திரத் தம்பதியின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

*நன்றி: அனுஜா அனு*