*தேவா இசையில் என் பாடல்*

மறைந்த இசையமைப்பாளர் தேவா, மிகுந்த இசை ஞானம் மிக்கவர். அவரை, கானா என்ற வட்டத்திற்குள அடைத்து விட்டார்கள். பழகுவதற்கும் இனிமையான மனிதர். அவரோடு வசந்த காலப் பறவைகள், சூரியன், இந்து, ஐ லவ் இண்டியா போன்ற படங்களில் பணியாற்றினேன்… ஒரு பால்ய காலத்து நண்பனைப் போல அவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு சென்னை தொலைக் காட்சியில் பணியாற்றிய நாட்களைப் பற்றி என்னோடு பகிர்ந்து கொள்வார். நல்ல மனம் கொண்டவர்.
ஒரு நோயாளியாக அவரை, கஷ்டப்பட வைக்காமல், மரணம் அவரை அன்போடு அழைத்துப் போயிருக்கிறது. . .
நடிகர் கார்த்திக் நடித்த ‘இன்று’படத்திற்கு இசை தேவாதான். நான் அந்தப் படத்திற்கு வசனம் எழுதினேன். கூடவே ஒரு பாடலும் எழுதினேன். எழுதிக் கொடுத்த வரிகளுக்கு, மிக அருமையாக மெலட்டியாக ஒரு டியூன் போட்டதோடு, பாடகர் உன்னிகிருஷ்ணனை பாட வைத்திருந்தார் தேவா. பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்கள்…
