*அந்தரன் – விமர்சனம்*



பொருள் புரியாத வார்த்தையில் படத்தின் தலைப்பை வைப்பதில், இயக்குனர்களுக்கு ஏன் இந்த ஆர்வம்? அந்தரன் என்றால் மறைந்திருந்து தாக்கும் வேட்டைக்காரன் என்று பொருளாம்! கதை நாயகி, கார்த்திகா எனும் இளம் பெண்ணிற்கு, திருமணம் நிச்சயமாகும் பொழுதெல்லாம், கல்யாணத்திற்கு முன் அந்த மாப்பிள்ளைகள் கொலை செய்யப்பட்டோ, தற்கொலை செய்தோ, தற்செயலாகவோ இறந்து விடுகின்றனர்.
இந்த மரணங்களின் பின்னணியைத் துப்புத் துலக்கக் காவல்துறை அதிகாரி ஹீரோ செழியன் நியமிக்கப்படுகிறார். மறைந்திருந்து வேட்டையாடுபவரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
செழியனாக நடித்துள்ள பிரஜின், நடிப்பில் முன்னேறி இருக்கிறார். அவரது இயல்பான நடிப்பும், வேகமும் படத்திற்கு ப்ளஸ் பாயிண்ட்டாக இருக்கிறது. காரணம், படத்தின் கதை சுவாரசியமாக இருந்ததுதான். பிரதான போலீஸ் கதாபாத்திர வேடத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார், பிரஜின். ஒரு போலீஸ்காரராகவும், காதலைப் பல வருடம் மனதில் சுமந்து திரிபவராகவும், ஒரு தயக்கத்துடன், அதே சமயம் கொஞ்சம் மிடுக்குடன் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் கார்த்திகாவிடம் காதலை வெளிப்படுத்தும் காட்சிகளில்கூட தடுமாற்றமின்றி நடித்து ஸ்கோர் செய்கிறார் பிரஜின்.
கார்த்திகாவாக இவானா வருண் நடித்துள்ளார். கண்ணியமாக நடந்து கொள்ளும் ஆட்டோக்காரரைப் பின் தொடர்ந்து காதலிப்பதாகட்டும், தன்னைச் சுற்றி நிகழும் மரணங்களால் சோர்ந்து போவதாகட்டும், க்ளைமேக்ஸில், வெடிப்பதாகட்டும், பிரஜினுடன் போட்டி போட்டுக் கொண்டு மிகச் சிறப்பாக நடித்துள்ளார், இவானா.
க்ளைமேக்ஸில், இயக்குநர் மறைத்து வைத்துள்ள அட்டகாசமான ட்விஸ்ட்டை, பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு நடிப்பில் அசத்துகிறார். வித்தியாசமான இரண்டு கேரக்டர்களை தைரியமாக ஏற்று நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு, இசை என்று மொத்தத்தில் நிறைவைத் தரும் மிஸ்ட்ரி த்ரில்லராக ரசிக்க வைக்கிறது இந்தப் படம்!
AndharanTheHunter Today Grand Release in Worldwide Cinemas 🎥
@SKPOffl @actorprajin1 @imhari_sr_ #Ivanavarun @SantoshRaavan19 @Adhiran_actor @phathmen @AnupamakumarONE @Ramiz_Geetha @kishore_ramaDOP @IgnatiousAswin @sasikumarartdi1 @Lyricist_mohan @vjrajivofficial @uie_offl @onlynikil @omlimusic @Meinigarmedia @digitallynow
