கொம்பு சீவி – விமர்சனம்!

 

பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும், பொன்ராமின் வழக்கமான நகைச்சுவை டச்சோடு கமர்ஷியல் படமாக மிளிர்கிறது, இந்த கொம்பு சீவி. சரத்குமார், ஹீரோ சண்முகபாண்டியனின் கலக்கல் நடிப்பில் ஒரு விஜய்காந்த் படத்தைப் பார்த்த உணர்வைத் தருகிறது, இந்தப் படம். சரத்குமாரின் அறிமுகம், சண்முக பாண்டியனின் அறிமுகம் இரண்டும், படத்தின் அமர்க்களம்! கிராமத்துக் கதைக் களத்தில் பொன்ராம் புகுந்து விளையாடி இருக்கிறார். சரத், தன் பாத்திரம் உணர்ந்து நடிப்பில் காமடி கலந்து விளையாடி இருக்கிறார். படம் முழுக்க சரத்தும் சண்முக பாண்டியனும் அடிக்கும் லூட்டிகள், ரசிக்கும்படியாக இருக்கின்றன. பி&சி ஆடியன்ஸ், ரசிக்கும்படியாக பல காட்சிகள் கைதட்ட வைக்கின்றன.

யுவன் சங்கர் ராஜாவின் இசை, படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட்! பாடல்கள், ரீ ரிக்கார்டிங் இரண்டும் மிகச் சிறப்பு. பாலசுப்ரமணியத்தின் கிராமத்து ஒளிப்பதிவு, இதம். ஹீரோவிற்கும் ஹீரோயினுக்கும் காட்சிகள் மிக குறைவு. நீளம் காரணமாக எடிட்டர் கைவைத்து இருக்கலாம். கஞ்சா கடத்துவதற்கு, சாமியிடம் பூ போட்டு பார்ப்பதெல்லாம் ஓவர் ரகம்!

- Advertisement -

கலகலப்பிற்கு தீனி போட்டு, படத்தை சாமார்த்தியமாக கொண்டு போயிருக்கும் பொன்ராமிற்கு பாராட்டுகள்.

 

 

 

நட்சத்திரங்கள்

Shanmugapandian – Pandi
Sarath Kumar – Rokkapuli
Tharnika- Inspector Laila
Sujith Shankar – SP karan
Munishkanth – Padaiyappa
Kalki raja – Kunthu
Kali venkat – Constable
George maryam- Constable
Prabakar – Konda Reddy
Ramachandran – Broker panbalan
Indhumathy – Rokkapuli wife

தொழில் நுட்ப கலைஞர்கள்

Director: Ponram
Produced By : Mukesh T Chelliah
Banner : Star Cinemas
Music : Yuvan Shankar Raja
Editor : Dinesh Ponraj
DOP : Balasubramaniem
Action: Phoenix Prabhu, Sakathi Saravanan
Art: Saravana Abiram
Choreographer: Sherif, Azhar, Kavya.G
Lyrics: Yuga Bhaarathi, Pa Vijay, Snekhan
Stills:- C H Balu
Makeup: P S Kuppusamy
Costumer:- Dhanraj K
Costume Designer: Meenakshi
Direction Team: Selvaraj Thirumeni, Bala Sivasamy, Dinesh Narasimharaj, Edward Francis, Vel Sankar, Jamunu Pandi, Nandhakumar M, Arun
Associate Editor: Prshanth S
Di : Infinity Media
Colorist Shanmuga Pandian M
Vfx : Sozo Studios
Sound Mix : T Udhayakumar (Sound Vibe)
Sound Design:R.K.Aswath (DAW RECORDS) – R.Rajmohan
Design: Pavan Reddot
Production Controller: Kovai V Vijaya Kumar, Theni P Selvakumar
PRO : Nikil Murukan
Marketing & Promotion :- K V Mothi (Dec)
Music And Digital Partner – Saregama
Executive Producer: Jaya Sankar
Label: Saregama India Limited, A Rpsg Group Company