ஒண்டிமுனியும் நல்லபாடனும் – விமர்சனம்



ரொம்ப நாள் கழித்து பார்த்த நல்ல படம். ஒரு நல்ல இயக்குனர் திட்டமிட்டால், இதுமாதிரி 100 பட்ஜெட் படங்களை கொண்டு வரலாம் என்பதற்கு இந்தப் படம் சாட்சி!
கொங்கு மண்டலத்திலேயே அந்த மண் சார்ந்த மனிதர்களின் பிரச்னைகளைச் சொல்லி, அதற்கு புத்திசாலித்தனமாக விஷுவலாக பதில் சொல்லி இருக்கிறார், இயக்குனர் சுகவனம். வாழ்த்துகள்.
நடிகர்-இயக்குனர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பல கமர்ஷியல் படங்களில் பணிபுரிந்திருந்தாலும், இப்படியொரு தரமான, இயல்பான படத்தைக் கொடுத்திருக்கும் சுகவனத்திற்கு தனிப்பட்ட பாராட்டு!
நடித்திருக்கும் அத்தனை நட்சத்திரங்களும் தங்கள் பாத்திரங்களை நம்பி, படத்திற்கு உயிரூட்டி இருக்கிறார்கள்!
பாடல்களே இல்லாமல், அவை இந்தப் படத்திற்கு தேவையே இல்லை என்பதை உணர்ந்த இயக்குனர் அதை தவிர்த்திருப்பது, படத்திற்கு மிகப்பெரும் பலம்.
உலகத் தரத்திலொரு தமிழ்ப் படத்தை தந்திருக்கும் இயக்குனரை தாராளமாக பாராட்டலாம்.
ONDIMUNIYUM NALLAPADANUM
CAST
“Parotta” Murugesan as Nallapaadan
Karthikesan as “Periya Pannadi”
Chithra Natarajan as Thangam
Murugan as “Chinna Pannadi”
Senapathy as Mappillai
Vijayan as Velan
Vikadan as Pangali
CREW
Producer – K.Karuppasamy
Co Producer – Amaravathy
Written and Directed by Sugavanam
DOP – Vimal
Background Music – NTR (Natarajan Sankaran)
Editor – Sathish Kurosaw
Art – JK Antonay
Stunt – Mass Mohan
Sound Design – Hari Prasad
PRO – Nikil Murukan
