அஜித் – யுவன் சந்திப்பு!

- Advertisement -

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமார். தனது 63-வது படமான ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கார் ரேஸிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சினிமா, கார் ரேஸ் இரண்டிலும் ஒரே நேரத்தில் கால் வைக்காமல், 6 மாதம் சினிமாவிலும், 6 மாதம் கார் ரேஸிலும் இருப்பேன் என தெரிவித்திருந்தார்.
அஜித்தின்64-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகவும், அதில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் அஜித்தும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் நேரில் சந்தித்துள்ளனர். இவர்களின் சந்திப்பு சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. இது வெறும் சாதாரண சந்திப்பா, இல்லை படம் தொடர்பான சந்திப்பா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

- Advertisement -

அஜித்தை சந்தித்தது குறித்து யுவன் ஷங்கர் ராஜா தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அஜித்தை சந்தித்தது சந்தோஷம் என்றும், கார்களை பற்றி இருவரும் பேசிக்கொண்டு இருந்ததாகவும் பதிவிட்டுள்ளார்.