தமிழ்ப் படவுலகில் நாயகன் சிவகுமார்-60 ஆண்டுகள் நிறைவு! கல்யாண்குமாரின் Film Today- வாழ்த்துகிறது!

சிவகுமார் நடித்த முதல் படம், ஏ.வி.எம் புரொடக்சன்ஸ் தயாரித்த ‘காக்கும் கரங்கள்’. எஸ்.எஸ்.ஆர்., விஜயகுமாரி ஜோடியாக நடித்தனர். சிவகுமார் இரண்டாவது கதாநாயகனாக நடித்தார். ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். இப்படம் கடந்த1965 ஜூன் 19ம் தேதி திரைக்கு வந்தது. இன்றுடன், 2025 ஜூன் 19ம் தேதியுடன் அவர் திரையுலகம் வந்து, 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன…
சாதனை நாயகன் சிவகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.
