“விக்னேஸ்வரனாகிய நான் “

“விக்னேஸ்வரனாகிய நான் “என்ற பெயரில் நான் எழுதிய எனது புத்தகத்தை படித்து ,அதில் உள்ள விஷயங்களை சிலாகித்து பாராட்டிய சகோதரிலட்சுமிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !
பின்குறிப்பு :
இந்த புத்தகம் இப்பொழுது “கிளாப் ரெடி “என்ற பெயரில் புஸ்தகா பப்ளிகேஷன் வெளியிட்டு உள்ளது!ஆன்லைனிலும் pusthaka.com -ல் படிக்கலாம்!
#தீம் ஆஃப் தி வீக்
#எனக்குப் பிடித்த புத்தகம்
சில மாதங்களுக்கு முன் நான் திருச்சியில் என் அத்தை பேரன் கல்யாணத்திற்குப் போயிருந்த போது நமது சக்தி கோமதி வீட்டுக்குப் போய் இருந்தேன். நான் அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பும் போது கோமதி அவரது தம்பி இயக்குனர் வெங்கடேஷ் (அதாங்க, நம்ம அங்காடித்தெரு அண்ணாச்சி) அவர்கள் எழுதிய சுயசரிதை புத்தகத்தை எனக்கு பரிசாகக் கொடுத்தார். எனது பள்ளிப் பருவத்தில் அரசியல் தலைவர்கள் சுயசரிதை எழுதியதாகப் படித்து இருக்கிறேன். நான் முதன் முதலில் படித்த சுயசரிதைப் புத்தகம் இதுவே.
திரு வெங்கடேஷ் அவர்கள் மிகவும் எளிமையாக, எதார்த்தமாக, சில அத்தியாயங்களில் நகைச்சுவை கலந்து, மிகவும் சிறப்பாக தனது சுயசரிதத்தை எழுதியிருக்கிறார். அவர் இயக்குனர் சங்கருடனான தனது பயணம் பற்றி விறுவிறுப்பாக எழுதி இருக்கிறார். ஒரு நாள் இயக்குனர் சங்கர் அவருக்கு போன் செய்து, “நீ ஃப்ரீயாக இருந்தால் 7:00 மணிக்கு என்னை பார்க்க வா. உன்னை திரும்பி உன் வீட்டில் நான் ட்ராப் செய்கிறேன்” என்று சொன்னாராம்.
இருவரும் இது காலை ஒன்றரை மணி வரை பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பும்போது இயக்குனர் சங்கர் தன் காரில் ட்ராப் செய்து விட்டு கேட்டாராம். இது என் புது கார். அதைப் பார்த்தாயா என்று கேட்டதும் பார்த்தால் அது ரோல்ஸ் ராய்ஸ் கார்.
சூரியன் பட சூட்டிங் போது ஒரு முறை சங்கர், வெங்கடேஷிடம் சொன்னாராம், ” எதிர்காலத்தில் rolls-royce கார் வாங்கி அதில் போகணும்பா” என்று. இந்த நிகழ்வை படிப்பவர்களின் மனம் நெகிழும்படியாக வெங்கடேஷ் எழுதியிருந்தார். நடிகர் விஜய் நடித்த நிலாவே வா படத்தை இவர் இயக்கும் போது அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆன விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் பஞ்சுவாலிட்டி பற்றியும் விரிவாக எழுதியிருந்தார். பதிவின் நீளம் கருதி எனது பதிவை இத்துடன் முடித்துக் கொள்கிறேன் சக்திகளே. சமீபத்தில் புத்தகங்களே படிக்க முடியாத, (படிக்க சில மாதங்கள் ஆன) நான் படித்த, எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் இதுவே.
லெக்ஷ்மி சி.
