அடுத்த முதல்வர் மு.கஸ்டாலின் – லயோலா கருத்துக் கணிப்பு!

தமிழகத்தில் வரும் 2026 தேர்தலில் முதல்வர் வாய்ப்பு யாருக்கு என்ற தலைப்பில் ‘இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு’ சார்பில் நடந்த கருத்துக்கணிப்பில் 77.83 சதவீதம் பேர் மீண்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்களே வருவார் என்று கணித்திருக்கிறார்கள்.
இது குறித்து லயோலா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு நேற்று அளித்த பேட்டி:
“சென்னை லயோலா கல்லுாரி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு சார்பில் 2026 தேர்தலில் யார் முதல்வராவார் என்பது குறித்து 234 தொகுதிகளில் கருத்து கேட்கும் பணி கடந்த பிப். 5ம் தேதி துவங்கியது.70,922 பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பின் முதற்கட்ட ஆய்வு இம்மாதம் 17ம் தேதி நிறைவு பெற்றது. தற்போதைய தமிழக அரசின் செயல்பாடுகள் மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் கட்சிகள் உள்ளிட்ட 10க்கும் அதிகமான பிரதான கேள்விகளை மையமாக வைத்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டடது. இதில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்களே முதல்வர் ஆவார் என்பதே இதன் முடிவு”. என்றார்.
நாளைய முதல்வர் ஸ்டாலின் அவர்களை Film Today வாழ்த்துகிறது!

