ராமின் ‘பறந்து போ’ – திருட்டுக் கதையா?

சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியில் ஹிட் படம் என்று பேசப்பட்டு, சக்சஸ் மீட் எல்லாம் வைக்கப்பட்டு, கொண்டாடப்பட்ட ‘பறந்து போ’ என்ற படத்தின் மீது கதைத் திருட்டுப் புகார், சுமத்தப்பட்டிருக்கிறது!
தன் கதையை, அதுவும் நாடகமாக போடப்பட்ட ஒரு கதையைத் திடுடித்தான் ‘பறந்து போ’ படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று பகிரங்கமாக தன் முகநூல் பக்கத்தில் குற்றம் சுமத்தி இருக்கிறார், பிரபல கதாசிரியர் “வேதம் புதிது” கண்ணன். இவர் பாரதிராஜா உட்பல பல இயக்குனர்களிடம் கதாசிரியராக பணி புரிந்தவர். பிரபல நாடகக் கலைஞர்.

அவரை நேரடியாக தொடர்பு கொள்ள முயன்ற போது, ”தான் அமெரிக்காவில் தன் பிள்ளைகள் வீட்டில் இருப்பதாகவும், கண் சிகிச்சைக்காக ஓய்வில் இருப்பதாகவும் சொன்னார்.
இதோ அவரது கதைத் திருட்டு குறித்த குற்றச்சாட்டு:
“ என்னுடைய கதை, வசனத்தில் வெளியான ‘எல்.கே.ஜி. ஆசை’ என்ற நாடகத்தை தழுவி, ‘பறந்து போ’ என்ற படம் எடுக்கப்பட்டிருக்கிறது. நான் தமிழ்நாட்டில் இல்லாததை பயன்படுத்தி, கதை திருடப்பட்டு இருப்பதாக அறிகிறேன்.என்னிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. ஒரு கதாசிரியன் சாபத்துக்கு ஆளாகாதீர்கள்” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார், வேதம் புதிது கண்ணன்.
இதற்கு ‘பறந்து போ’ படத்தின் இயக்குநர், ராம் என்ன சொல்லப் போகிறார்? இந்தக் கதை, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதியப்பட்டிருக்கிறதால், பிரச்னை பெரிதாகப் பேசப்படும் என்று தெரிகிறது. வேதம் புதிது கண்ணன் அவர்களின், இந்த கதைத் திருட்டு புகாருக்கு, இயக்குனர் ராம் பதில் சொல்வாரா?

