ரக்டு (Rugged ) டைட்டில் போஸ்டர் வெளியீடு!

 

J. ஆனந்த் பிரதாப் இயக்கத்தில், குடும்பங்கள் கொண்டாடும் ஒரு படமாக தயாராகி இருக்கிறது, ‘ரக்டு’ என்ற படம். இதன் Title போஸ்டர் வெளியீடு இன்று மாலை சென்னையில் வெளியானது. குடும்ப அம்சங்கள் கொண்ட படமாக இது தயாராகி உள்ளது.

வெறும் தனிமனிதக் கதையாக நின்றுவிடாமல், குடும்ப விழுமியங்களையும் சமூகப் பொறுப்பையும் ஒரு புள்ளியில் இணைத்து, ஒரு அழுத்தமான பதிவாக இப்படம் உருவெடுத்துள்ளது. உறவுகளின் மேன்மையைச் சொல்லும் இந்தப் படம், சமூகத்திற்கான ஒரு மிகச்சிறந்த பாடமாகும்.

- Advertisement -

இந்தப் படத்தின் மூலம் ஜிஜோ சி.ஜான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார். முதல் படத்திலேயே நான்கு அட்டகாசமான மற்றும் அருமையான பாடல்களை வழங்கி இருக்கிறார். ” இந்த நான்கு பாடல்களும், இந்தப் படத்தின் ஆன்மாவாக திகழ்கின்றன” என்கிறார், படத்தின் இயக்குனர் ஜே.ஆனந்த் பிரதாப்.

பாடல்களை வி வி பிரசன்னா, சத்யன் மகாலிங்கம், ஶ்ரீநிஷா ஜெயசீலன், வைக்கம் விஜயலட்சுமி மற்றும் ரஞ்சித் பாடியுள்ளார். மெலடி மற்றும் துள்ளல் இசை கலந்த பாடல்கள் இவை.

T K கபாலி பாடல் ஆசிரியராக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

நட்சத்திர பட்டாளம்: நாயகனாக
பிரவீன் சி கே மற்றும் வின்சாகர், ஸ்டெபி ஜான்ஸ், குமரி தீபம் பிலிபோஸ், டொமினிக் ராஜ், அஜய், STS கருப்பு சுயம்பு, கிஷோர், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஸ்பெஷல் கெஸ்ட் ரோலில் : கும்பாரி பட இயக்குனர் கெவின்

தயாரிப்பு: J.K.S. Productions.
இயக்கம்:
J. ஆனந்த் பிரதாப்.