முதல் பக்கம் பட விமர்சனம்

வெற்றி ஹீரோவாக நடித்து வந்திருக்கும் படம். மதுரையில் அம்மாவுடன் வசிக்கும் வெற்றியின் அப்பா, ஒரு பிரபல க்ரைம் நாவலிஸ்ட். சென்னையில் இருந்து வரும் ஒரு பிரபல பத்திரிகை, மறைந்து போன அந்த க்ரைம் மன்னனைப் பற்றி ஒரு தொடர் எழுத விரும்புகிறது. தன் அப்பா பற்றிய விபரங்களைச் சொல்ல சென்னை கிளம்புகிறார், வெற்றி.

அந்தப் பத்திரிகையின் ஆசிரியர்தான் ஹீரோயின்! தொடர் எழுதி முடிக்கும் பத்து நாட்களில் இருவருக்கும் காதல் உருவாகி விடுகிறது. ஆனால் டூயட் காட்சிகள் இல்லாதது ஆறுதல்!

- Advertisement -

இடையில் ஒரு ஷேர் ஆட்டோவில் போகும் வெற்றியை ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திக்கிறார். அவர்களுக்குள் ஒரு நெருக்கம் உண்டாகிறது. காரணம் ஒரு கொலை எப்படி நடந்து இருக்கும், யார் கொலை குற்றவாளியாக இருக்க முடியும் என்று யோசித்துச் சொல்கிறார் வெற்றி! அது அவரது அப்பாவின் ஜீன் மூலமாக அவருக்குக் கிடைத்திருக்கும் ஒரு எக்ஸ்ட்ரா பவர் என்று அந்த இன்ஸ்பெக்டர் நம்புகிறார். அதன் தொடர்பாக மேலும் சில கொலைகள் நடக்கின்றன. அதையும் கூட இருந்து பார்த்ததைப் போல விளக்கமாக சொல்கிறார், வெற்றி! இதனால் அந்த இன்ஸ்பெக்டரின் நெருக்கம் அதிகமாகிறது. அந்த தொடர் கொலைகளுக்கு யார் காரணம், எதனால் அந்த கொலைகள் நடக்கின்றன என்று நன்கு கதை சொல்லி இருக்கிறார், இயக்குனர். வெற்றியோடு போதும் அந்த வில்லன் நடிகர் தான் தயாரிப்பாளர். உடலை மிகப் பொருத்தமாக தேர்வு செய்து வைத்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார். படம் முழுக்க ஹீரோ வெற்றிதான் வெற்றிநடை போடுகிறார். நம்பத்தகுந்த காட்சிகள், மிக குறைவாக இருந்தாலும் கொலை என்பதால், சுவாரசியம் குறையாமல் வேகமாக தொடங்குகிற படம் வேகமாக முடிந்து விடுகிறது.

இன்ஸ்பெக்டராக வரும் தம்பி ராமையாதான் படத்தின் இரண்டாவது ஹீரோவாக நிமிர்ந்து நிற்கிறார். தன் அனுபவ நடிப்பால் வெளுத்துக் கட்டுகிறார்! காமெடி, சீரியஸ், சென்டிமென்ட் என்று நவரசங்களை படம் முழுக்க கொட்டித் தீர்த்து இருக்கிறார்.

படம் முடியும்போது ஹீரோ வெற்றியின் கண்டுபிடிப்புகள், திட்டங்கள் நமக்கு ஏனோ ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை!

Cast

Vetri – Prabhakaran
Shilpa Manjunath – Swathi
Thambi Ramiah – Ramiah
Kinsley – Minnal Raja
Mages doss

Crew

Director: Anish Ashraf
Music Director: AJR
DOP: Arvind
Editor: Vishal
Produced by Mageswaran Devadas, Sinnathambi Production
Co-Producer: Shandy Ravichandran
PRO: Nikil Murukan