*டார்க் விமர்சனம்*


ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியீட்டில் APV மாறன், கணேஷ் கே பாபு தயாரிப்பில் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில், அஜய் கார்த்திக், அஞ்சனா, நட்டி, பாக்யராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள தமிழ் திகில் திரைப்படம் ‘டார்க்’
கதை இதுதான்:
பாக்யராஜ் குடியிருக்கும் சொந்த வீட்டின் மாடி போர்ஷனில், வாடகைக்கு குடியிருக்கும் மூன்று இளைஞர்களில் ஒருவன், மற்ற இரு இளைஞர்களைக் கொன்று, தானும் தீவைத்துக் கொண்டு மூன்று பேரும் இறந்து விடுகிறார்கள். கடனுக்காக வீட்டை விற்கலாம் ஏன்றால் பேய்வீடு என்று வாங்க யாரும் வரவில்லை என்ற வேதனையில் இருக்கிறார், பாக்யராஜ்.
இந்த சூழ்நிலையில் கதாநாயகன் அஜய் கார்த்திக், புதிதாக அந்த மாடி வீட்டுக்கு வாடகைக்கு குடி வருகிறார். அங்கு பல அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. அது என்ன? அஜய் கார்த்தி அந்த அமானுஷ்ய சக்தியிடமிருந்து தப்பித்தாரா, இல்லையா என்பதற்கு பதில் சொல்வதே படத்தின் சுவாராஸ்யமான மீதிக்கதை!
கதையின் நாயகனாக அஜய் கார்த்திக், நடிப்பில் நன்றாகவே ஸ்கோர் செய்துள்ளார். முக்கிய வேடத்தில், பாக்யராஜ் சிறப்பாகவே செய்துள்ளார். அஞ்சனாவின் நடிப்பும் அருமை. விடிவி கணேஷ் வரும் காட்சிகளில் சிரிப்பலைக்கு பஞ்சமில்லை. போலிஸ் அதிகாரியாக நட்டி, சிறப்பாக நடித்துள்ளார். சிபி சக்ரவர்த்தி, இந்துமதி என இதில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர.
மனு ரமேசன் இசையில் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு பெரிய ப்ளஸ். ரவி சக்தியின் ஒளிப்பதிவு அருமை.
இயக்குநர் கல்யாண் கே ஜெகன், ரசிக்கும்படியான சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் கதையை சுவாராஸ்யமாக கொண்டு போயுள்ளார். நல்ல பொழுதுபோக்குப் படம்!
Produced by @apvmaran @babuganesh.k @5starsenthil
Directed by @Kalyan422
@ajaykarthiofficial @Iam.anchana
@mgstudiosofficial
@ravi__sakthi_
@manu.ramesan
@filmeditor_it_is
@artdir_raja
@arunachalam_sivalingam
@gayathribalasubramanian21
@vikranths22
@balaji_babu.s
@uie_movies
@xgenstudio_
@hitmusic0055
@thinkmusicofficial @onlynikil @linqmarqet
