ஐ.பி.எல். பட விமர்சனம்

சோசியல் மீடியா பிரபலம் டிடிஎப் வாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம். கருணாநிதி இயக்கி இருக்கிறார். ராதா பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜி.ஆர் மதன்குமார் தயாரித்திருக்கிறார். கிஷோர், அபிராமி, போஸ் வெங்கட் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
கதை?
கிஷோர் டாக்ஸி ஓட்டுநர். இன்னொரு பக்கம் டெலிவரி பாயாக வாசன் வேலை செய்கிறார். ஒரு நாள் வாசன் பைக்கில் வரும்போது கிஷோர் குறுக்கே வந்து விடுகிறார். இதனால் கோபப்பட்டு வாசன், கிஷோரை திட்டி விடுகிறார். ஆனால், வேறொரு நபர் கிஷோர் காலின் மீது பைக்கை ஏற்ற,
கிஷோருக்கு கால் முறிவு ஏற்பட்டு விடுகிறது. ஆனால், வாசன் மீது கிஷோர் கோபத்தில் இருக்கிறார். இடையில் த.கு.க என்ற கட்சியின் தலைவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அதே கட்சியின் முதல்வரின் பண்ணை வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்களைத் திருட, தன்னுடைய ஆட்களை அனுப்பி வைக்கிறார். தொடர்சியாக சில கொலைகளும் விழுகின்றன.
இதே நேரம், மதுரையில் ராஜேஷ் என்ற இளைஞர், தான் லஞ்சம் வாங்கியதை வீடியோவாக எடுத்ததாக நினைத்து போலீஸ் அதிகாரி போஸ் வெங்கட், அவனை லாக்கப்பில் உதைக்க, அந்த இளைஞன், இறந்து விடுகிறான். ஆனால், அவனுடைய செல்போனில் உள்ள ஒரு அதிர வைக்கும் வீடியோவை வைத்து போஸ், தப்பிக்க பார்க்கிறார். இதில் அப்பாவியாக இருக்கும் கிஷோரை அரசியல்வாதிகள், அதிகாரிகள் எல்லோருமே சேர்ந்து பலிகடாவாக்க நினைக்கிறார்கள்.
கிஷோரின் தங்கையைத்தான் வாசன் காதலிக்கிறார். சிக்கலில் இருக்கும் தன்னுடைய காதலியின் அண்ணன் கிஷோரை, வாசன் எப்படி காப்பாற்றினார்? இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் பின்னணி என்ன? என்பதுதான் கதை.
இந்தப் படத்தில் டிடிஎஃப் வாசன், இயல்பாக, சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் பாதியில் வாசன் அமைதியாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் சிறப்பாக, ஆக்க்ஷன் காட்சிகளில் அசத்துகிறார். க்ளைமாக்ஸ் சேஸிங் சூப்பர்.
படம் முழுக்க கிஷோர்தான் வருகிறார். தன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இருந்தாலும் நிறைய்ய்ய காட்சிகள், சலிப்பைத் தருகின்றன. எடிட்டர் எதிர்ப்பு சொல்லவில்லையா?
படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. கதைக்களம், முந்தையை ஆட்சியை நினைவுபடுத்துகிறது. பாடல்கள் பெரிதாக கவரவில்லை என்றாலும், பின்னணி இசை ஓகே. நாற்பது மார்க் கொடுக்கலாம்.
starring TTF Vasan, Kishore, Abhirami, Kushitha Kallapu, Singampuli, Hareesh Peradi, ‘Aadukalam’ Naren, John Vijay, Bose Venkat, Dileepan, Janani and others.
Directed by Karunanithi.
Music composed by Ashwin Vinayagamoorthy.
