ஏ ஆர் ரஹ்மானிடம் சில கேள்விகள்

உங்க காலைப் பொழுதை, எப்படி துவக்குவீர்கள்?
எழுந்ததும் கடவுளிடம் பிரார்த்திப்பேன்.
நீங்க உங்க பாடலை பத்தி யோசிச்ச விசித்திரமான இடம் எது…?
விமானத்துல, வட துருவத்தின் மேல போகும் போது…
முதன்முறையா வெற்றியடைந்ததை, நீங்க எப்படி உணர்ந்தீர்கள்?
ஜென் மனநிலைதான்
எந்த மாதிரியான பாடல்கள் உங்களுக்கு நெருக்கமா இருந்தன…?
நான் சென்னைல வளர்ந்தப்ப, p.சுசிலா, விஸ்வநாதன், கண்ணதாசன் அவங்களோட பாடல்கள் பிடிக்கும்?
உங்களோட பெரிய விமர்சகர் யார்…?
நான்தான்.
உங்களுக்கு எந்த மாதிரியான இசை பிடிக்கும்…?
காதல் பாடல்கள்.
நடு ராத்திரில உங்களுக்கு பசி வருமா…? என்ன சாப்பிட அப்போ விரும்புவீங்க…?
பர்கர் சாப்பிடுவேன். என் மகன் எனக்கு பர்கர்தான் ஆர்டர் பண்ணுவான்!
தெருவோர கடைகள்ல இருக்குற சாப்பாட்டு வகைகள் பிடிக்குமா…?
பிடிக்கும்.
மும்பைல உங்களுக்கு பிடிச்ச, தெருவோர கடை உணவு வகை எது…?
பானி பூரி. பேல் பூரி
எங்களுக்கு பரிந்துரை செய்ற மாதிரி எதாவது இடம் இருக்கா…?
இல்ல. என் studio-ல வேலை செய்றவங்க ஆர்டர் பண்ணுவாங்க. அது ஸ்டூடியோவுக்கே வந்துரும்.
மும்பைல உங்களுக்கு பிடிச்ச இடம் எது…?
என் இந்த ஸ்டூடியோதான்!

