இயக்குனராகும் இரா. பார்த்திபனின் மகன்

நடிகர், இயக்குனர் பார்த்திபனின் மகன் ராக்கி, விரைவில் ஒரு திரில்லர் படம் இயக்க இருப்பதாக தெரிகிறது.
“என் மகன் ராக்கி ஒரு கமர்சியல் சிறந்த படத்துக்கான கதை, திரைக்கதையுடன் காத்திருக்கிறார். விரைவில் அறிவிப்பு வர, நானும் அவரோடு காத்திருக்கிறேன். அந்தப் படத்தில் நடிக்க, எனக்கும் ஒரு வாய்ப்பு தருவதாக வாக்களித்திருக்கிறார். அது என் பிறவிப்பயன். என்னைப் போல அவர் அதிகம் பேச மாட்டார். என்னிடமே அளவாய்தான் பேசுவார். அவர் வெற்றி பெறும் நாளே, எனக்கு மிகச் சிறந்த நாள்!” என்று பார்த்திபன் சொல்லி இருக்கிறார். இருவருக்கும் film today-வின் வாழ்த்துக்கள்!
