இயக்குநராக களமிறங்கிய, சூர்யா-ஜோதிஜாவின் வாரிசு, தியா!

Leading Light – இது சூர்யா- ஜோதிகா தயாரிப்பில் அவரது மகளான,
தியா இயக்கியிருக்கும் டாக்கு டிராமாவின் பெயர்!

2டி என்டர்டைன்மெண்ட் சார்பில், சூர்யா ஜோதிகா தயாரிக்க, பாலிவுட் லைட்வுமன்களை மையமாக கொண்டு உருவாயிருக்கும் டாக்கு டிராமா குறும்படம் “லீடிங் லைட்”. தியா இப்படம் மூலம் இயக்குநராக களமிறங்கியுள்ளார்.

- Advertisement -

திரையுலகிற்கு பின்னால் மறைந்திருந்து, ஒளி தரும் லைட்வுமன்களை பற்றியும், பாலிவுட் உலகில் பணிபுரியும் அப்பெண்களின் அனுபவங்களையும் விவரிக்கும் டாக்குமெண்ட்ரி – டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.

உலகம் முழுக்க பலத்த பாராட்டுக்களைக் குவித்து வரும் இப்படம், Oscar Qualifying Runக்காக லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவின் Regency Theatre-இல் திரையிடப்படுகிறது. செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை தினமும் மதியம் 12:00 மணி காட்சியாக இப்படம், திரையிடப்படுகிறது.

அறிமுக இயக்கத்திலேயே, ஆஸ்கர்வரை செல்லும் இத்தகைய பெருமையை பெற்றிருக்கும் இயக்குநர் தியாவுக்கு, பல பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

நன்றி தகவல்: சதீஷ்குமார்