*’டைட்டானிக்’ திரைப்பட விமர்சனம்*



கலையரசன், கயல் ஆனந்தி, காளி வெங்கட் , ஆஷ்னா சவேரி , ராகவ் விஜய் , சேத்தன், தேவதர்ஷினி, மதுமிதா, சுதா நடித்துள்ளனர். எம் ஜானகிராமன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். பல்லு ஒளிப்பதிவு செய்துள்ளார். திருக்குமரன் என்டர்டைன்மென்ட் சார்பில் சி .. குமார் தயாரித்துள்ளார்.
சென்னையிலிருந்து ரயிலில் தன் திருமணத்திற்காக பெங்களூர் வருகிறார் ராகுல் விஜய்.
அவருடன் சக பயணிகளாக வரும் காளி வெங்கட், கலையரசன் மூன்று பேரும் சந்தித்துப் பேசிக் கொள்கிறார்கள். காளி வெங்கட் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குப்போன தன் மனைவியை அழைக்கவும், கலையரசன், பிரிந்து போன தன் காதலியைப் பார்க்கவும் என்று பெங்களூர் வருகிறார்கள்.
அவர்கள் தங்கள் கடந்த காலக் கதையை பற்றிப்பேசிப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு காதல் உண்டு, பிரிந்து போன காதலி உண்டு.பள்ளிக்காலம் கல்லூரிக் காலம் அலுவலகக் காலம் என்று காலம் வேறுபட்டிருந்தாலும் மொத்தத்தில் மூன்று பேரின் காதல்களும் தோற்றுப்போன அனுபவத்தோடு உள்ளன. பேசிக் கொண்டிருக்கும் போது, பெங்களூர் வந்து விடுகிறது. ரயில் சினேகம் நெருங்கிப் பழகியதால், அவர்களைத் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைக்கிறார் ராகவ் விஜய். மணமகனாக ராகுல் மணமகளாக கயல் ஆனந்தி. இவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். அவர்களது கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் ஒரு தொடர்பு உண்டாகிறது. அதுதான் படத்தின் பெரிய திருப்பம். அது என்ன என்பதுதான் இந்த ’டைட்டானிக் ’ படத்தின் கதை.
கலையரசன், காளி வெங்கட் மற்றும் ராகவ் விஜய் மூன்று பேரும் தங்களது இயல்பான நடிப்பில் ஜெயிக்கிறார்கள்.
ரயிலில் நண்பர்களான பிறகு தங்களது காதல் கதைகளைப் பற்றி உரையாடிப் பகிர்ந்து கொள்ளும் காட்சிகளில் அவர்களின் நடிப்பு மிக நன்று. கலகலப்பும் நகைச்சுவையும் நிறைந்த காட்சிகள்.
காளி வெங்கட் தனது பள்ளிக் காதலி பற்றிக் கூறுவது, மிகவும் எதார்த்தம். கலையரசன், கல்லூரிக் காதலி கயல் ஆனந்தியை பிரிவதைக் கூறுவது அனுதாபத்தை ஏற்பத்துகிறது.
ஆஷ்னா சாவேரியை தன் அலுவலகத்தில் காதலிக்கும் ராகவ் விஜய், பிறகு ஒரு மோதலில் பிரிகிறார்.பிறகு திருமண தருணத்தில் பழைய காதலியைப் பார்த்து பதற்றம் கொள்கிறார். நல்ல நடிப்பு.
நாயகியாக நடித்திருக்கும் கயல் ஆனந்தி, கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து, நடித்திருக்கிறார். காதல், குழப்பம், குற்ற உணர்ச்சி என அனைத்தையும் தனது பெரிய கண்களில் காட்டி அசத்துகிறார்.
இன்னொரு நாயகியாக வரும் ஆஷ்னா சவேரி ஓக்கே லெவல்!
ஒளிப்பதிவாளர் பல்லு, காட்சிகளை குளிர்ச்சியாகப் படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.
நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் அனைத்தும் காதலைக் கொண்டாடுகின்றன. ஒரு கும்மாளப் பாட்டும் உண்டு.
மூன்று பேரின் காதல்தான் மையக்கதை என்றாலும், அதை ரசிக்கும்படியாகக் கூறி இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார், இயக்குனர் எம் ஜானகிராமன்.
காதல் வரை செல்கிற படக் கதைகளில் காதலுக்குப் பின் என்ன என்று வாழ்க்கையைப் பற்றிப் புரிய வைத்துள்ளார் இயக்குநர் எம்.ஜானகிராமன். சந்தர்ப்பங்கள்தான் காதலை முடிவு செய்கின்றன என்கிற வாழ்க்கை தத்துவத்தை, படமாக்கி இருக்கும் விதம் சிறப்பு.
*நட்சத்திரங்கள்:*
Kalaiyarasan
Kayal Anandhi
Kaali Venkat
Ashna Zaveri
Ragav Vijay
‘Jaangiri’Madhumitha
Chetan
Divyadarshini
Guest Appearance : ‘Director’ Balaji Mohan & Gayathri
*தொழில் நுட்பக் கலைஞர்கள்:*
Produced by : C.V.Kumar
Written & Directed by M.Janakiraman
Music : Nivas K. Prassanna
Cinematography : Ballu
Art Director : S. Ramprasad
Editing : Radhakrishnan Dhanapal, ‘Ignatious’ Aswin
Executive Producer : S.Saravanan, Sri Chakra
Manager : ‘chinnamanur’ K. Satish Kumar
Costume Designer : J.Kavitha – Rohit
Costumer : Natarajan
Make up : Vinod
Stills : Velu
Sound Design & Mix : Thomas Kurian
DI : Navin
Publicity Designs : Design Point
Data Management : Cuein studio
PRO : Nikil Murukan
Digital Marketing & Creative Promotions : Digitally
Production Banner : Thirukumaran Entertainment
