வாஸ்து S.செல்வா அவர்களின் கேள்வி- பதில்கள் தொடர்கிறது…

9)வடமேற்கு மூலையை ஏன் வாயு மூலை என்று அழைக்கிறோம்?
மனித உயிர் வாழ, மிக முக்கிய பங்கு வகிப்பதில் காற்று பெரிய பங்காற்றுகிறது. சுவாசிக்க, காற்று இல்லையேல் மரணம் நிகழும். அதுபோலதான், ஒரு வீட்டின் வாயு மூலை பாதிக்கப்பட்டால் அந்த வீட்டில் உயிர் சேதங்கள் அதிகமிருக்கும். உயிருக்கும் வடமேற்கு மூலைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.
சூரியனின் உத்ராயனம் மற்றும் தட்சாயன நகர்வின் காரணமாக பருவநிலை உருவாயிற்று. வடகிழக்கு பருவநிலை மற்றும் தென்மேற்கு பருவநிலை,
மேலும் சூரிய கதிர் வீச்சுகளால் வெப்பத் தாக்கம் அதிகம் ஏற்படாத திசைகள் வடக்கு மற்றும் வடகிழக்கு.
வெப்பத் தாக்கம் அதிகம் ஏற்படும் திசைகள், தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு திசைகளாகும்.
அதனால் தென்மேற்கு பருவநிலையின்போது, வறட்சியான காற்று வீசும் சூழ்நிலையை அது கொடுக்கும்.
வெப்பத் தாக்கம் குறைவான பகுதியான வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் ஈரப்பதம் மற்றும் குளிர்ந்த பகுதியாக இருக்கும். அதனால் வடகிழக்கு பருவநிலையின்போது, அதிகமான ஈரப்பதம் நிறைந்த குளிர்ந்த காற்று வீசும் சூழ்நிலையை அது கொடுக்கும். வெப்பத் தாக்கம் அதிகம் இருக்கும் பகுதிகளில் தென்மேற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வீசும் வறட்சியான காற்றும், ..
வடக்கு மற்றும் வடக்கிழக்கு பகுதிகளில் வீசும் மிக குளிர்ந்த காற்றும் ஒன்றுசேர்ந்து, ஒரு மிதமான, ரம்மியமான காற்று மண்டலமாக வடமேற்கு பகுதி உருவாகிறது. எனவேதான் வடமேற்கு மூலையை வாயு மூலை என்று அழைக்கிறோம்.
வீட்டில் வசிக்கும் அனைவருக்கும் போதிய
பிராணவாயுவை கொடுக்கும் பகுதியாக வடமேற்கு திகழ்கிறது. ரம்மியமான காற்று கிடைக்கும் பகுதி என்பதால் அப்பகுதி, திறப்புடன் இருக்கும் போது நல்ல மனநிலையும் நல்ல அறிவாற்றுலும் கிடைக்கும். வடகிழக்கை, சமமான நன்மைகளைக் கொடுக்கும் பகுதியாக கருதலாம்.
காற்று திசை என்பதால் நிலையில்லாத தன்மையைக் கொடுக்கும். எனவேதான் அதை, திருமணம் ஆகாத வயது வந்தவர்கள் தங்கும் அறையாக பயன்படுத்துவதால், அவர்கள் அடுத்த நிலைக்கு (திருமணம்) செல்வதற்க்கான மாற்றத்தைக் கொடுக்கும்.
மேலும் தொழிற்சாலைகளில், பெரும்பாலும் உற்பத்தி செய்த பொருட்களை வடமேற்கு மூலையில் வைத்தால் விரைவில் அந்த பொருள் விற்பனையாகும்!
இந்தப் பகுதியில் பெரிய மரங்கள் இருப்பின், அங்கிருந்து வரும் ரம்மியமான, சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாது.
ஆனால் சிறிய ரக மரங்கள் இருக்கலாம். கொய்யா, மா, நெல்லி …. இப்படி.
10) வடமேற்கில் வாஸ்து குறைகள் ஏற்பட்டால் என்ன பாதிப்புகள் வரும்?
1) வடமேற்கு திசையில் பிரதான படுக்கையறை இருக்கக்கூடாது.
2) வடமேற்கு வடக்கு பார்த்து வாசல் கூடாது.
3) வீட்டினுள் உள் படிக்கட்டு அமைக்கக் கூடாது.
4) வீட்டுக்கு வெளியே படிக்கட்டு அமைத்தால், அதற்கு அடியில் கழிவறை அமைக்கக் கூடாது.
5) தெருக்குத்து இருக்க கூடாது.
6) ஹை சீலீங் அமைக்க கூடாது.
7) மேல்நிலை /கீழ்நிலை தண்ணீர் தொட்டி, கிணறு, குளம்,இருக்க கூடாது
8) வடமேற்கில் வளர்ந்த அமைப்பில் தாய் சுவரை ஒட்டி வெளிப்புற கழிவறை கூடாது.
மேலே கூறப்பட்ட கட்டமைப்புகள் இருந்தால், கீழ்கண்ட பாதிப்புகள் வசிப்பவர்களுக்கு ஏற்படும்.
சுவாச கோளாறு, மனநிலை கோளாறு,
கூட்டு மரணம்,
தற்கொலை எண்ணம்,
கல்வி பாதிப்பு, காதல் தோல்வி,
கள்ளகாதல்,
கஞ்சா போதை,
Online சூதாட்டம்,
Online வீடியோ கேம் அடிமை, வரவுக்கு மீறிய செலவு, காலில் அடிபடுதல், ஷேர் மார்க்கெட் தோல்வி, பேராசை, MLM மோசடியில் சிக்குவது,
ஜப்திநிலை
போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
(கேள்வி பதில்கள் தொடரும்)
