வங்காள விரிகுடா விமர்சனம்

படத்தின் நாயகன், மனைவியால் மனவேதனை அடைந்து, கடற்கரையில் தனிமையில் புலம்புகிறார். அப்போது தற்கொலைக்கு முயற்சிக்கும் முன்னாள் காதலியை காப்பாற்றி, தனி வீட்டில் குடியமர்த்துகிறார். அதன் காரணத்தால் காதலியின் கணவனை கொலை செய்ய வேண்டிய கட்டாயம். பிறகு காதலியுடன் சேர்ந்து வாழ்கிறார்.

நாயகன் குகன் சக்கரவர்த்தியாரால் கொல்லப்பட்ட நபர், அவரது காதலியை போனில் தொடர்பு கொண்டு மிரட்டு கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை!

- Advertisement -

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை உள்பட 21 துறைகளை தனியாக கையாண்டு ஹீரோவாக வரும் குகன் சக்ரவர்த்தியார், கேரக்டருக் கேற்ப நடித்துள்ளார். சண்டைக் காட்சிகளில் ஆவேசம் காட்டி நடித்துள்ளார். காதலியாகவும், மனைவியாகவும் வரும் இரு ஹீரோயின்களும் அவருக்காக உருகுகின்றனர். வாசு விக்ரம், வையாபுரி, பொன்னம்பலம் நன்கு நடித்துள்ளனர். மற்றவர்கள் அனைவரும் புதிது என்பதால் யாரும் மனதில் பதியவில்லை.

ஒளிப்பதிவும், இசையும் நன்று. பல துறைகளை கையாண்டதைப் போல ஆக்‌ஷன், சஸ்பென்ஸ், தத்துவம், அமானுஷ்யம், பேமிலி சென்டிமெண்ட், அரசியல் என்று, பல்வேறு விதங்களில் படம் போவதில் குழப்பம்! ஆனால் கிளைமாக்சில் அப்துல் கலாமின் வரிகளால் மனம் மாறி பேசுவது ஆறுதல். அடுத்த படத்தில் கதை திரையில் மட்டும் தன் முழு கவனத்தையும் செலுத்தினால் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அவருக்குமே மிகவும் நல்லது.