*லீடர் – விமர்சனம்*

- Advertisement -

 

 

 

- Advertisement -

 

 

 

 

#Leader is unstoppable with fast-filling shows everywhere – The box office rampage continues !!! 🥳💥

@legendsaravanastoresproduction #LegendSaravanan #லீடர் ❤️‍🔥

#LeaderRunningSuccessfully

Starring : @yoursthelegend 🔥
A @dir_dskofficial Directorial 🎬
A @ghibranofficial Musical 🎵
🎟️ Book your tickets here : https://movies.starviva.in/movie/leader

@rajputpaayal @therealandreajeremiah @actor_shaam @ilan_iyal @santhoshprathapoffl @lal_director @amritha_aiyer @prabhakalakeya @vtvganeshnj @aranthainisha @sam_samridha151016 @venkateshselvaraaj @pradeeperagav @g_durairaj_art @maheshmathew_stuntdirector @deepthi_r_j__ @poorts_20 @ks_rajasekaran @sathish_aaraab @udaykumar_mix #Kabilanஇயக்குநர்hool @thinkmusicofficial @onlynikil @digitallypowerful

‘லீடர்’ திரைப்படத்தில் சரவணா ஸ்டோர்ஸ் லெஜெண்ட் சரவணன் ஹீரோவாக நடித்திருக்கிறார். பாயல் ராஜ்புத் கதாநாயகி. ஷாம், ஆண்ட்ரியா, ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் வைபோதாவின் மனதைத் தொடும் இசை, ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷின் இனிமையானமான கேமரா கோணங்கள், பிரதீப் இ.ராகவின் படத்தொகுப்பு மற்றும் மகேஷ் மேத்யூவின் பரபரப்பான சண்டை காட்சிகளுடன், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்தபடமாக, ‘லீடர்’ உருவாகியுள்ளது. ஒரு கமர்சியல் ஹீரோவாக தனக்கேற்ற கதை என்ன? என்பதை சரியாக புரிந்து கொண்டு, ஒரு ஹீரோவாக ஜெயித்து விட்டார் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி லெஜண்ட் சரவணன்.

இந்தப் படத்தின் களம் தூத்துக்குடியும், அதன் துறைமுகமும்தான். தூத்துக்குடியில் விடிவி கணேஷ் நடத்தும் கார் ஒர்க்ஷாப்பில் கார் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார், படத்தின் ஹீரோவான சரவணன். அவருடைய வீட்டில் அவரும், அவருடைய 10 வயதான மகளும்தான் இருக்கிறார்கள். மகள் காது கேளாத மாற்றுத் திறனாளி. இதனால் அவள்மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார், சரவணன். ஒர்க் ஷாப்பில் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவதும், மறுபடியும் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருவதுமாக அந்த வேலையை மட்டும் சரியாகச் செய்து வருகிறார் சரவணன்.

தூத்துக்குடி துறைமுகத்தில் கண்டெய்னர் மூலமாக, தடை செய்யப்பட்ட பல பொருட்களையும், போதை மருந்துகளையும் கடத்தி பெரும் பணம் பார்த்து வருகிறது ஒரு சர்வதேச கும்பல். அந்தக் கும்பலின் லோக்கல் தலைவனாக இருப்பவர் பாகுபலி பிரபாகரன். இவருக்கு அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பிப்பது மெயின் வில்லனான சந்தோஷ் பிரதாப்.

இந்த நேரத்தில் ஒரு கண்டெய்னர் முழுவதும் அமோனியம் நைட்ரேட் என்ற வெடிபொருளை அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த வெடிபொருளை தூத்துக்குடிக்குள் கொண்டு சென்றுவிட வேண்டும் என்று பாகுபலி பிரபாகரன் துடித்துக் கொண்டிருக்கிறார்.

லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருக்கும் ஆண்ட்ரியா இதைப் பற்றி கேள்விப்பட்டு அந்த கண்டெய்னரை முடக்கவும், அந்தக் கொள்ளை கும்பலை கைது செய்யவும் துடியாய் துடிக்கிறார். ஆனால், பணத்தை வீசி, டிஜிபி வரையிலும் பாகுபலி பிரபாகன் ஆள் பிடித்து வைத்திருப்பதால் ஆண்ட்ரியாவின் அனைத்து முயற்சிகளுக்கும் தடை!

இந்த நேரத்தில் தூத்துக்குடியின் புதிய எஸ்பியாக பதவி ஏற்கிறார் ஷாம். அவருக்கும், ஆண்ட்ரியாவுக்கும் இடையில் முதலில் நட்பு ஏற்படவில்லை. ஒரு கசப்புணர்வால் இருவரும் விலகியே இருக்கிறார்கள். அதே சமயம் ஆண்ட்ரியாவின் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே வருகிறார் ஷாம்.

இந்த நேரத்தில் அந்த வெடி மருந்து இருக்கும் கண்டெய்னரை ஷாம் கைப்பற்றி போலீஸ் ஸ்டேஷனில் வைக்கிறார். இப்போது போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் அந்தக் கண்டெய்னரை கடத்துவதற்கு ஒரு பிளான் போடுகிறார் ஆண்ட்ரியா. சரவணனின் மகளை கடத்தி வந்து, ஒளித்து வைத்துவிட்டு, அவளை பாகுபலி பிரபாகர்தான் கடத்தி இருக்கிறார் என்ற ஒரு பொய்யைச் சொல்லி, சரவணனை தூண்டிவிட்டு அந்த கண்டெய்னரை வெளியில் எடுக்க வைக்கிறார், ஆண்ட்ரியா.

இன்னொரு பக்கம் ஷாம் கடத்தலுக்கு உள்ளாகும் அந்த கண்டெய்னரை மீட்க பெரும் முயற்சி செய்கிறார். ஆனால் சரவணனோ இந்தத் திட்டத்தின் இடையில் நுழைந்து, வெல்வதோடு ஆண்ட்ரியா, ஷாம் இருவரையும் ஒரே நேரத்தில் ஏமாற்றுகிறார்.

அப்போதுதான் சரவணனுக்கும் அந்தக் கொள்ளை கும்பலுக்கும், கண்டெய்னர் கடத்தலுக்கும்… அவர் அடிக்கடி துறைமுகத்துக்குள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வந்து போகும் ரகசியமும் தெரிய வருகிறது.

சரவணனின் பின்னால் இருக்கும் ஒரு சஸ்பென்ஸைத் தேடுகிறார்கள் ஷாமும் ஆண்ட்ரியாவும்.

அந்த உண்மை என்ன ? விடை கிடைத்ததா? படத்தை தனது மிகச் சிறந்த திரைக்கதையால் படத்தின் துவக்கத்திலிருந்து கடைசி வரையிலும் கண் இமைக்காமல் பார்க்க வைத்திருக்கிறார், இயக்குநர் துரை செந்தில் குமார். அவருக்கு ஸ்பெஷல் கைலுக்கல்!

‘லெஜன்ட்’ சரவணன், அசால்ட்டாக நடிப்பில் ஒரு தனி முத்திரை பதித்திருக்கிறார். தன் மகள் மீது அவர் காட்டுகின்ற பாசம், மிக இயல்பாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

பாயல் ராஜ்புத் என்ற பேரழகி, காதல் காட்சிகளில் தேறி ஜொலிக்கிறார்.

சண்டைக் காட்சிகளில் இப்போதைய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, வித்தை காட்டி இருக்கிறார், சரவணன். ரயிலுக்குள் நடக்கும் சண்டைக் காட்சியை படமாக்கியவிதம் தூள். சில செண்டிமெண்ட் காட்சிகளில் சமாளித்து நடிப்பைக் காண்பித்திருக்கிறார் ஹீரோ.

பழைய நாயகிகளை நினைவுபடுத்தும் நாயகி பாயல் ராஜ்புத், தன்னுடைய முக பாவனைகளிலேயே பாஸாகிகிறார்.

சின்ன வில்லனாக நடித்திருக்கும் பாகுபலி பிரபாகர், இயக்குனர் புண்ணியத்தில், வில்லத்தனமான நடிப்பில் நம்மை கவர்கிறார். குணச்சித்திர நடிப்பில் லால் அருமை. விடிவி கணேஷ் வழக்கம்போல சிரிக்க வைக்கிறார்.

இடைவேளைக்கு பிறகு, அமிர்தா ஐயர் படத்தின் கதை, திரைக்கதை நகர்வதற்கு பெரிதும் உதவி செய்திருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் மகளாக நடித்திருக்கும் இயல் தன்னுடைய குழந்தைத்தனமான நடிப்பின் மூலம் கட்டிப் போடுகிறார். அவருக்கு நமது பாராட்டுக்கள்.

ஒளிப்பதிவாளர் எஸ்.வெங்கடேஷ், இந்தப் படத்தை ரிச்சாக காட்டியிருக்கிறார். சண்டை காட்சிகள் சூப்பர்.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகம். பின்னணி இசையில் பின்னி எடுத்து இருக்கிறார். திரைக்கதையின் வேகத்திற்கு நல்ல ஈடு கொடுத்திருக்கிறார். படத்தொகுப்பாளர் பிரதீப், தன் பணியை நிறைவாகச் செய்திருக்கிறார்.

ஆக்சன் படம், அப்பா மகள் செண்டிமெண்ட் காட்சிகள் என்று நிறைவாகப் போகிறது படம்.
இயக்குநர் துரை. செந்தில்குமாரின் திறமையான இயக்கத்தில் இந்தப் படம், ஒரு மிகச் சிறந்த பொழுதுபோக்கு படமாக கொண்டாடப்படும்.