முருகனடிமை வாஸ்து S செல்வா எழுதும் கதவைத் திற காசு வரட்டும்


வாஸ்து குறித்த கேள்வி-பதில்கள் தொடர்கின்றன…

4) ஒரு குடும்பத்தில் ஆண்வாரிசுகள் மட்டுமே அதிகம் பிறக்கின்றன. இதற்கு வாஸ்து ஓர் காரணமா?

வாஸ்து என்பதே பஞ்ச பூதங்களையும்- சூரியனையும் அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. இதில் சூரியனே பிரதானமாக கருதப்படுகிறது. ஏனெனில், சூரியனிடமிருந்து வரும் கதிர்கள், வீட்டினுள் எந்த தடையும் இல்லாமல் வருமேயானால் அந்த வீட்டில் வாழும் தம்பதியருக்கு ஹார்மோன்கள் சரியாக வேலை செய்யும்.
மருத்துவ உலகம் என்ன சொல்கிறது என்றால் டெஸ்டோஸ்டெரன் என்ற ஹார்மோன்கள் சரியாக சுரந்தால்தான் ஆண் பன்புள்ள செல்கள் உருவாகும் என்கிறது. இந்த ஹார்மோன் சரியாக சுரக்க, அடிப்படையாக விட்டமின் D தேவைப்படுகிறது. ஆகவே காலை சூரிய ஒளி, உடலில் விட்டமின் D உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. சூரிய ஒளியில் வரும் UVB கதிர்கள் → சருமத்தில் Vitamin Dயை உற்பத்தி செய்ய உதவுகிறது. Vitamin D, டெஸ்டோஸ்டெரோன் உற்பத்தியை அதிகரிக்க உதவும் என அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன. எனவே ஒரு வீட்டின் கிழக்கு பாகத்தில் எந்த தடையும் இல்லாமல் சூரிய ஒளி வருமானால் அந்த வீட்டில் ஆண் குழந்தை அதிகம் பிறக்கும்.

- Advertisement -

5) வாஸ்து என்பது வீட்டிற்கு மட்டும்தானா அல்லது காலியிடத்திற்கும் பொருந்துமா?

அருமையான கேள்வி! ஒரு காலியிடம் நீங்க வாங்குறீங்க. அதில் எதாவது வாஸ்து குறை இருக்கிறது என்றால் அந்தக் குறை, நீங்க இருக்கும் வீட்டினிலும் இருக்கும். வீட்டின் வாஸ்து பாதிப்பே நீங்க வாங்கும் காலியிடத்திலும் பிரதிபலிக்கும். இதுதான் ஒற்றவையை இயக்கும் சங்கிலித் தொடர் என்பார்கள். உதாரணமாக ஒருவர் தெருகுத்து வீட்டில் குடியிருக்கிறார். இவர் நிலம் வாங்கும் போது பெரும்பாலும் தெருகுத்து இடமாகவே கிடைக்கும்.

இந்த வாஸ்து பாதிப்பு என்ற சங்கிலித் தொடரை வெட்டுவதே, வாஸ்து நிபுணர்தான். குடியிருக்கும் வீட்டின் வாஸ்து தவறுகள், வாங்கும் காலியிடத்திலும் இருக்க கூடாது என்றால், அதற்கு வாஸ்து நிபுணரின் ஆலோசணையுடன் வாங்குவதே சாலச் சிறந்தது ஆகும். வாஸ்து ஆலோசனையின்றி நிலத்தை வாங்கும்போது, அதில் வாஸ்து பாதிப்புகள் இல்லாமல் வாங்குவதே சிறப்பு. இதில் தவறு ஏற்பட்டால் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்றாகிவிடும்!

6) ஒரு வீட்டில் கிழக்கு மூடிவிட்டால் என்னவாகும்?

திசைகளில் வடக்கு பெண்தன்மை, கிழக்கு ஆண்தன்மை என்பார்கள். கிழக்கை மூடிவிட்டால், அந்த வீட்டிற்கு வரும் சூரியக் கதிர்கள் தடைப்பட்டு, விட்டமின் D உற்பத்தி தடை ஏற்படும். இதனால் அந்த வீட்டில் இருக்கும் ஆணுக்கு லெய்டிக் செல்கள் சுரக்காது. இதன் காரணமாக ஆணிண் உடலில் ஆண் பண்புகள் குறையும். எனவே அந்த ஆண், பெண்ணைச் சார்ந்து வாழும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அந்தக் குடும்பத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமும் பெண்ணிடம் செல்லும். பெண்ணுக்கு கூடுதல் சுமை ஏற்படும். ஆணும், பெண்ணும் சமமான வாழ்க்கையை வாழ்வதே சிறந்தது.

(கேள்வி-பதில்கள் தொடரும்)

வாஸ்து குறித்த உங்கள் சந்தேகங்களுக்குத் தெளிவு பெற, முருகனடிமை S. செல்வா அவர்களைத் தொடர்பு கொள்ள:
+918072664907