நா. முத்துக்குமாருக்கு திரையுலகம் செய்த உதவி

- Advertisement -

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் 50 பிறந்த நாளை, அவரது நெருங்கிய நண்பர்கள் இயக்குனர் பாலா, சீமான், ராம், யுவன் சங்கர் ராஜா என பலரும் ஒன்று சேர்ந்து நேரு ஸ்டேடியத்தில் ‘ஆனந்த யாழை’ என்ற பெயரில், ஒரு நிகழ்ச்சியாக நடத்தினார்கள். அதில் வந்த வருமானத்தில், முத்துகுமார் குடும்பத்தினருக்கு, எண்பது லட்சத்தில் வீடு ஒன்று வழங்கினார்கள். மேலும் நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்திக் குடும்பம் ஒன்று சேர்த்து ரூபாய் பத்து லட்சத்திற்கான செக் ஒன்றை வழங்கினார், நடிகர் சிவகுமார். முத்துகுமாரின் இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாக நடிகர் சிவகார்த்திகேயன் மேடையில் அறிவித்தார்.