நாட்டியத்தில் மிளிரும் மீரா

கன்னியாகுமரியில் பிறந்த ஆர்.டி.மீரா ராகவ், 2005 ம் வருடம் பிறந்தவர். பரதநாட்டியக் கலையில், 13 வருடங்கள் மிகச் சிறப்பான அனுபவங்களுடன் முன்னணியில் இருப்பவர். எல்லோராலும் கொண்டாடப்படும் கலாஷேத்ரா பாணி பரதக் கலையில், தனது ஒன்பது வயது முதல் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பவர். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் 500க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளை நடத்தியவர். தொடர்ந்து மிகச்சிறப்பாக தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர். நடனப் பயிற்சி, ஆசிரியர் நட்டுவாங்கம் முதலிய கலைத்திறன் அவருக்குள், மிக ஆழமாக வேரூன்றி இருக்கின்றன. அபிநயத்திலும் சமஸ்கிருத விளக்கங்களுடனும் நடனத்திலும், தாள துல்லியத்திலும் மிகச் சிறப்பாக பரிணமிக்கும் மீரா, டிப்ளமோ இன் கிளாசிக்கல் டான்ஸ் முடித்து, தற்போது இளங்கலை பொறியியல் படித்து வருகிறார்.
நடனம், நடனப் பயிற்சி அனுபவம், கலாஷேத்திரபாணி பரதநாட்டியம், அபிநயம், நடன அமைப்பு, நட்டுவாங்கம் முதலியவற்றில் மிகச் சிறப்பான மேதமைத் தன்மை, சமஸ்கிருத ஸ்லோக நடனம் போன்றவை, இவரது சிறப்பு!
2021ல் இவரது அரங்கேற்றம் நடந்தது. மலேசியாவில் நடந்த அகில உலக நடன போட்டியில், இன்டர்நேஷனல் டான்சர் டைட்டில், ஆறு உலகச் சாதனை நடன நிகழ்ச்சியில் பங்கெடுத்தது, சேலத்தில் அகில இந்திய கல்ச்சுரல் பவுண்டேஷன் நினைவு இலச்சினையில் இடம் பெற்றது, பாரம்பரிய பரதக்கலை நடன பங்களிப்பிற்காக ரோட்டரி கிளப் லயன்ஸ் கிளப் பாராட்டு பெற்றது, 500-க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளை இந்தியா மற்றும் உலகெங்கும் நடத்தியது, பரதநாட்டியக் கலையை காட்சிப்படுத்துவதில், மேடை நிகழ்ச்சி நடத்துவதில் மிகத் துடிப்பான ஈடுபாடு போன்றவை மீராவின் சாதனைகள்! இந்திய பாரம்பரிய பரதக் கலையிலுள்ள அழகையும், அதன் ஆழத்தையும், உலகத்தரம் வாய்ந்த அதன் செயல்திறனையும், வருங்கால வளரும் இளம் தலைமுறையுடன் ஒன்றிணைந்து, நவீன பார்வையுடன் இந்த உலகிற்கு கொண்டு வருவது மீராவின் உயர்ந்த நோக்கம்! வாழ்க இவரது நாட்டியப் பணி. மீராவின் சாதனைகள் மென்மேலும் பெருக, Film Today வாழ்த்துகிறது!
