கொலைச் சேவல்’ திரைப்பட விமர்சனம்!



நடிப்பு : கலையரசன், தீபா பாலு, பால சரவணன், ஆதவ் சந்திரா, கஜராஜ், விஜய் சத்யா, அகரன் வெங்கட், விஜயலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி,, தனலட்சுமி மஞ்சுளா கயல், மணிமேகலை
தயாரிப்பு: ஆர்பி பாலா, கௌசல்யா பாலா
இசை: சாந்தன்
ஒளிப்பதிவு: பி ஜி முத்தையா
இயக்கம்: வி ஆர். துதிவானன்
பி ஆர் ஓ : நிகில் முருகன்.
கதை என்று பார்த்தால், கதாநாயகி தீபா பாலு, பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் நாயகன் கலையரசனை கல்யாணம் முடித்துக் கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு தீபா பாலு கர்ப்பமாகிறார். வெளியூரில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் மீண்டும் காதலன் ஊருக்கு திரும்புகிறார்கள். காட்டுப் பகுதியில் இருக்கும் குலதெய்வம் நிறைசூலி தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தால் குழந்தை நல்லபடியாக பிறக்கும் என்பதால், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தீபா பாலு, தன் காதல் கணவர் உள்ளிட்ட குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு செல்கிறார்கள். தீபா பாலுவின் மாமானான ஆதவ், ஒரு கும்பலுடன் காட்டுக்குள் வந்து, பூஜை முடிந்து குடும்பத்தினர் புறப்பட்டு சென்றதும் தீபா பாலுவையும் கலையரனையும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்ட ஆரம்பிக்கிறது. இறுதியில் அந்த கும்பலிடமிருந்து இருவரும் தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதன் “கொலை சேவல்” படத்தின் மறுபாதிக் கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் கலையசரன், தனது எதார்த்தமான நடிப்பு மூலம் கவர்கிறார். ஒரு பாசமான கணவனாகவும், இக்கட்டான சூழலில் தனது மனைவியைக் காக்கப் போராடும் ஒரு இளைஞனாகவும் சிறந்த முறையில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கும் தீபா பாலு, கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நம்பிக்கையுடன் நடித்துள்ளார். முதல் படமாக இருந்தாலும் நடிப்பில் குறை வைக்காமல் மிக அழகாக நடித்திருக்கிறார். திருமணத்திற்கு முந்தைய காதல் காட்சிகளில், மிக இயல்பு. பால சரவணனுக்கு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம். காமெடியான வசனம்க்கள் மூலம் படம் நெடுக, வந்து மனதில் நிற்கிறார்.
எல்லா நட்சத்திரங்களுமே, கிராமத்து மனிதர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு, குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று. இயக்குனரின் எண்ணங்களை அழகாக பிரதிபலித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சாந்தனின் பின்னணி இசை படத்திற்கு பெரும்பலம். இசையின் மூலம் பயத்தை உருவாக்கி பார்ப்பவர்களை, பதற வைக்கிறார்.
கதை எழுதி இயக்கியிருக்கிறார் வி.ஆர்.துதிவாணன். சாதிய ஆணவங்களைப் பற்றிய கதை அதை கடைசி வரை காப்பாற்றி, க்ளைமாக்ஸில் மிரள வைத்து விடுகிறார். திரைக்கதைக்கு ஒரு சபாஷ். கொலைச்சேவல் மூலம் ஜாதிய அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு, பாதிக்கப்பட்டவர்களின் வலியை மிகக் கொடூரமாகவும் காட்சிப்படுத்தி இருக்கிறார். க்ளைமாக்ஸ் ஓவர் டோஸ்தான்.
‘கொலைச்சேவல்’ பெரிதாக பேசப்பட்டிருக்க வேண்டிய படம்.

