குபேரா – விமர்சனம் By Rajasekar from U.S.

கமல்+ மணிரத்னம் கூட்டணியால் வந்த தக் லைஃப் படத்தால், நொந்து போயிருந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, ஆறுதல் பரிசு கொடுத்திருக்கிறார், நடிகர் தனுஷ்!
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்து இன்று வெளியாகியுள்ள திரைப் படம் குபேரா. தமிழகத்தில் இப்படம் இன்று காலை 9 மணிக்கு வெளியானாலும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்காளில் காலை 6.30 மணிக்கு வெளியானது. வெளிநாடுகளில் பிரீமியர் ஷோ என சொல்லப்படும் முதல் காட்சி முடிந்துவிட்டது. எனவே, படம் பார்த்தவர்கள் டிவிட்டர் போன்ற சமூகவலைத் தளங்களில் படம் எப்படி இருக்கிறது என பதிவிட்டு வருகிறார்கள்.
குபேரா படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்களே வருகின்றன.. குறிப்பாக தனுஷின் நடிப்பை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள். ‘படத்தின் கடைசி 10 நிமிட காட்சி சிறப்பாக இருந்தது. சேகர் கம்முலா எழுதியுள்ள இந்த கதைக்கு எப்படி கிளைமேக்ஸ் அமையும் என பதட்டமாக இருந்தது. ஏனெனில் கொஞ்சம் தப்பினாலும் சொதப்பிவிடும் ரிஸ்க் இருந்தது. ஆனால், அவர் அதை சிறப்பாக கையாண்டிருக்கிறார்.
பிச்சைக்காரனாக தனுஷ் இதில் தூள் கிளப்பி இருக்கிறார். அரசியல் நையாண்டி வசனங்களும் சூப்பர்! இந்த படம் ஒரு எமோஷனல் ரோலர்கோஷ்டர். இது உங்கள் இதயத்தை இடித்து நீடித்து நிற்கும். தனுஷின் நடிப்பு உங்கள் மனதில் நீண்ட நாள் பாதிப்பை ஏற்படுத்தும். நாகார்ஜுனாவும், ராஷ்மிகாவும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். 2025ம் வருடம் நான் பார்த்த சிறந்த படம் இது என்பது என் கருத்து!
‘தேசிய விருது சரியாக கொடுக்கப்பட்டால், அது தனுஷுக்காக கொடுக்கப்பட வேண்டும். ‘லவ் ஸ்டோரி’ தெலுங்குப் படத்திற்கு பின் சேகர் கம்முலா கொடுத்திருக்கும் சிறப்பான திரைப்படம் இது. ஆழமான கதையை வைத்து மனதை பாதிக்கும் சினிமாவை கொடுத்திருக்கிறார். கண்டிப்பாக இப்படம் பிளாக்பஸ்டர் அடிக்கும்!
ஒவ்வொரு காட்சியிலும் தனுஷ் வாழ்கிறார்.. அவரின் நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை. தனுஷ் இந்திய சினிமாவுக்கு கிடைத்த பரிசு!
வெளிநாடுகளில் தெலுங்கு படங்களுக்கு நல்ல வரவேற்பு எப்போதும் இருக்கும். அதுபோல குபேராவுக்கும் நிறைய டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது! நேரத்தை இன்னும் குறைத்திருந்தால் படம் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும்.
By Rajasekar from U.S.
