கீரனூர்-30

 

 

அன்பு எழுத்தாளர் கீரனூர் ராஜா, இலக்கிய உலகில், தன் 30 வருடங்களை நிறைவு செய்கிறார். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என் ஒரு முழு நேர எழுத்தாளராக செயல்பட்டு வருவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ‘அண்ணே’ என்று அவர் என்னை அன்போடு அழைக்கும்போது, ஒரு உடன்பிறந்த சகோதரரின் குரலாகவே அது ஒலிக்கும். வாழும்போதே பலரின் வாழ்த்துகளும், அவரது எழுத்துகளுக்குக் கிடைக்கும் வரவேற்பையும் மரியாதையையும் பார்த்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ‘கீரனூர்-30’ என்ற இந்த விழா சிறக்க, மனமாற வாழ்த்துகிறேன். அந்த இனிய நாளில், வாருங்கள் நீங்களும், ஒன்று சேர்ந்து வாழ்த்தி மகிழ்வோம்….