காந்தா படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார், நடிகை பாக்யஸ்ரீ

ஸ்பிரிட் மீடியா தயாரிக்கும் வரலாற்று திரைப்படமான “காந்தா” மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பாக்யஸ்ரீ.
ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபரர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், துல்கர் சல்மான் மற்றும் சமுத்திரகனி முதன்மை வேடங்களில் நடிக்க, இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார்.
1950களின் சென்னையின் கலாச்சாரப் பின்புலத்தில் நடைபெறும் காந்தா திரைப்படம், கண்ணைக் கவரும் காட்சிகள், உணர்ச்சி பூர்வமான கதைக் களத்துடன், அடையாள சிக்கல், ஈகோ போராட்டம், காதல் ஆகியவற்றை மையமாக கொண்டு அழுத்தமான கதையை சொல்லும் திரைப்படமாகும். பாக்யஸ்ரீ, அந்தக் காலத்தின் சீரிய நயத்தையும் மென்மையையும் வெளிப்படுத்தி, மனிதநேயத்தையும் காலத்தைக் கடக்கும் உணர்வுகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு கதாபாத்திரத்தைs சிறப்பாக செய்துள்ளார்.
காலத்துக்கேற்ற உடல் மொழி, உணர்ச்சி பூர்வமான உரையாடல் — இவற்றை கட்டுப்பாட்டுடனும் ஆழத்துடனும் வெளிப்படுத்தி, தனது முழு திறமையை இந்தப் படத்தில் வெளிக்காட்டியுள்ளார்.
“காந்தாவின் மூலம் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகுவது, என் வாழ்க்கையின் மிகச் சிறப்பு மிக்க தருணம். திறமையான குழுவுடன் இணைந்து இந்த அழகான கதையை உயிர்ப்பித்தது மிகப் பெருமை. நாங்கள் உணர்ந்த மாயாஜாலத்தை, பார்வையாளர்களும் உணருவார்கள் என நம்புகிறேன்” என்கிறார், பாக்யஸ்ரீ.
பாக்யஸ்ரீயை அன்புடன் வரவேற்கிறது, filmtoday.net
