கவிஞர் சினேகனின் தந்தை தெய்வத்திரு சிவசங்கு அவர்களின் திருவுருவ பட திறப்பு விழா.



சிறப்பு கல்வேட்டு ஒன்றினை திறப்பதற்கு முன் சினேகன் பேச்சு…
“உங்களோடு பயணிக்க தொடங்கிய காலத்தில் இருந்து உங்களுக்கு தெரியாமலோ, உங்களிடம் சொல்லாமலோ எதையும் செய்தது இல்லை.
முதல் முறையாய் ஒரு இடைச்செருகலாக ஒரு தகவலை உங்களிடம் தெரிவிக்க முயல்கிறேன் மன்னிக்கவும்.
நான் பிக்பாஸ் நிகழ்வில் இருக்கும் போது அதில் வென்றால் எனது சொந்த கிராமத்தில் ஒரு நூலகம் கட்டுவேன் என்று சொல்லிருந்தேன். பிக்பாஸ் நிகழ்வில் நான் வெல்லவில்லை என்றாலும் எப்படியாவது ஒரு நூலகத்தை என் ஊரில் கட்ட வேண்டும் என்று முயற்சித்தேன்.
அதுவும் பூர்விக இடத்தில் கட்டக்கூடாது என்னுடைய வருமானத்தில்தான் அந்த இடத்தை வாங்கி கட்ட வேண்டும் என்றும் பிடிவாதமாக இருந்தேன். என்னால் எப்போதெல்லாம் முடிந்ததோ அப்போதல்லாம் ஒரு செண்ட் இரண்டு செண்ட் என்று கொஞ்ச கொஞ்சமாக இடத்தை வாங்கியும் முடித்து விட்டேன்.
அந்த இடத்தில் தற்போது நூலகம் மட்டுமல்ல நம் பரம்பரிய கலைகளை கற்றுக் கொள்ளும் ஒரு கலைக்கூடமும், வளரும் தலைமுறைகள் வந்தமர்ந்து படிக்கும் ஒரு படிப்பகமும் அமைப்பது என்று முடிவெடுத்தேன்.
அதற்கான கட்டிட வறைப்பட பணிகளும் தொடங்கி விட்டது…
அதற்கு
நம்மவர் கலைக்கூடம்
நம்மவர் படிப்பகம்
நம்மவர் நூலகம் என்று
பெயரிட வேண்டும் என்றும் ஏற்கனவே முடிவு செய்து இருந்தேன். ஆனால் காலம் இப்படி ஒரு நிகழ்வின் மூலம் உங்கள் பாதம் என் மண்ணின் மீது பதிய ஏற்பாடு செய்திருக்கிறது என்றதும் இந்த வாய்ப்பினை நான் என் சுயநலத்திற்காக பயன்படுத்தி கொள்கிறேன்.
அமையவிருக்கு ஒரு மாபெரும் கனவிற்கான கல்வெட்டை திறந்து வைக்குமாறு அன்போடு அழைக்கிறேன் …
அன்பே… அன்பை மன்னிக்கும்
மன்னிப்பை ஏற்று மறுதலிக்காமல் ஏற்பீர்கள் என்று அழைக்கிறேன் வாருங்கள்.” என்றார் சினேகன்.
நிகழ்வில், கமல்ஹாசன்,
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
அமைச்சர் கோவி.செழியன்,
ச. முரசொலி (தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர்),
மெளரியா IPS,
தங்கவேல் (துணைத் தலைவர் மக்கள் நீதி மய்யம்)
அருணாச்சலம் (பொதுச் செயலாளர் மக்கள் நீதி மய்யம்)
துரை.சந்திரசேகரன் (திருவையாறு சட்டமன்ற உறுப்பினர்)
T.K.G. நீலமேகம் (தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர்),
சண். இராமநாதன் (தஞ்சாவூர் மாநகராட்சி மேயர்),
அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர் மாநகராட்சி துணைமேயர்),
து. கிருஷ்ணசாமி வாண்டையார் (மாவட்ட காங்கிரஸ் தலைவர்),
நெ. தியாகராஜன் (மாவட்ட வருவாய் அலுவலர் தஞ்சாவூர்),
ஜோதிலட்சுமி (இணை ஆணையர் இந்து சமய அறநிலையத்துறை தஞ்சாவூர்),
மாதவன்(மாவட்டக் கல்வி அலுவலர் தஞ்சாவூர்),
ம. இராஜாராமன் (மண்டல உதவி இயக்குநர்.
மண்டல கலை பண்பாட்டு மைய்யம் தஞ்சாவூர்),
இரா.செழியன் (யோகம் ரியல் ஸ்டேட் அதிபர், வெற்றித் தமிழர் பேரவை மாநில துணை பொது செயலாளர்),
புதுக்கோட்டை பாரதி பட்டிமன்ற பேச்சாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

