*ஆஸ்காருக்கு போகும் இளையராஜா இசை



மராத்தி மொழியில் வெளியாகி தற்போது ஆஸ்கர் அவார்டுக்கு சென்றுள்ள “கோந்தல்” திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சந்தோஷ் தவக்கர், பல நூற்றாண்டுகள் பழமையான கோந்தல் சடங்குடன் தொடர்புடைய கலாச்சார அடையாளத்தையும் இசை மரபுகளையும் கோந்தல் திரைப்படத்தில் அதன் இயல்பான இசையை பிரதிபலிக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தின் பேரில், படத்திற்கு இசைஞானி தமது வழக்கமான நடைமுறையை தாண்டி இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.
“83 வயதான இசையமைப்பாளர் இளையராஜா ‘கோந்தல்’ (Gondhal) கலை நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனிப்பதற்காக சென்னையிலிருந்து நாசிக்கில் உள்ள எனது சொந்த கிராமத்திற்கு நேரில் பயணம் செய்து இரண்டு நாட்கள் அங்கே தங்கி இருந்து, அந்த மரபை நேரில் அனுபவித்த பின்னரே படத்திற்கான இசையை உருவாக்கினார். அவரது இந்த வருகையின் போது, பாரம்பரிய கீர்த்தனைகள், சடங்கு சார்ந்த இசை மற்றும் ‘கோந்தலி’ (Gondhali) கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. திரைப்படத்திற்கான இசைக் கோர்ப்பை உருவாக்கும் பணியில் ஈடுபடுவதற்கு முன்பாக, அவர் இத்தகைய பல்வேறு கலை வடிவங்களை ஆழமாக ஆய்வு செய்தார்.
அங்கு அவர் தங்கியிருந்த 2 நாட்களும் கீர்த்தனைகள், கோந்தல் சடங்குகள், பல்வேறு வகையான பாடல்கள் மற்றும் கோந்தலி கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தார். இந்தத் திரைப்படத்திற்காக பணியாற்றும் முன்பாக, அந்த மரபைப் நேரில் காண வேண்டும் என்று இளையராஜா விரும்பினார். திரைப்பட இயக்குனரின் விளக்கத்தை மட்டுமே நம்பியிருக்காமல், அவரே நேரில் நாசிக்கிற்கு வந்து அந்த நிகழ்வுகளைக் கவனித்தார். அதன் பிறகு அவர் சென்னை திரும்பிச் சென்று, படத்திற்கான பாடல் கம்போசிங்கையும், முழு இசையையும் விடவும். கதையின் கலாச்சாரப் பின்னணியைப் புரிந்து கொள்வதில் இளையராஜா கொண்டிருந்த அர்ப்பணிப்பையே இந்த முயற்சி வெளிப்படுத்துகிறது” என்கிறார் இப்படத்தின் இயக்குனர்.