*Battle பட விமர்சனம்*

 

 

இந்தப் படம் பல உண்மைகளை பேசுகிறது. இடையே காதலும் சேர்ந்து கொள்கிறது.
கல்வி, வியாபாரமாக கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் வணிகப் பொருளாக மாற்றப்பட்டு, ஆசிரியர்களும் மாணவர்களும் சந்திக்கும் நெருக்கடிகளையும் மனஅழுத்தங்களையும் அழுத்தமாக சொல்லப் பட்டிருக்கிறது.

உழைப்பாளி கூட்டம் தன் கைரேகை தேய்ந்தாலும் தன் பிள்ளைகள் கை ஓங்க வேண்டும் என ஓடி ஓடி உழைத்துச் சேர்த்த பணத்தை அவர்களின் படிப்பிற்காக செலவழித்து காத்து நிற்கும் பெற்றோர்களின் அவலம் படம் முழுக்க நிரம்பி உள்ளது.

வலிகளும் வேதனைகளும் நிறைந்த சமூகப் பிரச்சினையை படம் பிடித்து, சீர்கெட்ட சமூகத்தை மாற்ற வரும் கதாபாத்திரங்கள் கதாநாயகி மதி, குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்து வந்த ராப் மணி என்னும் இளைஞன், அவன் இசையால் உயர வாய்ப்பு மறுக்கப்படுவதும் யதார்த்தம்.

இரண்டு பாத்திரங்களையும், ஸ்டேட்டஸ் என ஒதுக்குவதும், திறமைகள் குவிந்து கிடந்தாலும் சிலரை குப்பையோடு பார்க்கும் அவல நிலையையும் இந்த திரைப்படம் எடுத்துக் காட்டுகிறது.

ராப் மணியாக வரும் ஹீரோவும் ஜோடியாக வரும் மதியும் நல்ல தேர்வு.

இந்த திரைப்படம், குறைந்த பட்ஜெட்டில் வெளிவந்திருந்தாலும் நல்ல கருத்துக்களை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

காதலும் தனித்திறமையும் உணர்வோடு காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. முதல் படத்திலேயே தனியார் பள்ளிகளில் நடக்கும் நடக்கும் அநீதிகளை வெட்டவெளிச்சமாக படமாக்கி இருக்கும் இயக்குனரை பாராட்டவே வேண்டும்.

Comments (0)
Add Comment