படையாண்ட மாவீரா பட விமர்சனம்

 

வ.கௌதமன் இயக்கி நடித்திருக்கின்ற “படையாண்ட மாவீரா” திரைப்படம், ஆரம்பகால விஜய்காந்த் படம் போல இருக்கிறது!
பா.ம. க.வை சேர்ந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கைச் சரிதத்தைச் சொல்கிறது, இந்தப், படம். அவர் இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் வாழ்ந்த பல விஷயங்களை நாம் தெரிந்து கொள்கின்ற வாய்ப்பாக இந்தப் படம் அமைந்திருக்கிறது.

படத்தின் வசனங்கள் எழுதிய பாலமுரளி வர்மனின் எழுத்து, மனதில் நிற்கிறது. பல இடங்களில் இவர் பேனா, ஷார்ப்பாக பேசி இருக்கிறது. ஒவ்வொரு வசனமும் படத்துக்கு பக்கபலம்! சில இடங்களில் உணர்ச்சிப் பிழம்பாக வெடிக்கிறது.

இந்தப் படத்தில் வ. கௌதமன் அவர்களின் நடிப்பும் கூடவே அவரது மகன் நடிப்பும் அமர்க்களம். சமுத்திரக்கனி, இளவரசு, ஆடுகளம் நரேன், சரண்யா பொன்வண்ணன் என, இந்தப் படத்தில் நடித்திருக்கின்ற அனைத்து கலைஞர்களின் நடிப்பும் படத்திற்கு பெரிய பலம். பாடல்களிலும் சண்டைக் காட்சியிலும் பிரமாண்டம் தெரிகிறது.

தொழில் நுட்பக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

இது ஒரு ஜாதிய படம் என்பது போல தெரிந்தாலும், காட்சி அமைப்புகளில், இயக்குனர் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. பின்னணி இசையில் சாம் சி.எஸ்., பட்ம் முழுக்க, ஒரு இடம் விடாமல் வாசித்துத் தள்ளி இருக்கிறார். பாடல்களுக்கு இசையமைத்திருக்கும் ஜி.வி.பிரசாத், தன் பங்கை திருப்தியாகச் செய்திருக்கிறார். கவியரசு வைரமுத்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு, எல்லா பாடல்களிலும் தெரிகிறார்.

டி எஸ் பியாக வரும் நடிகர், நல்ல அறிமுகம். ஒரு கமர்ஷியல் படத்திற்கான அத்தனை அம்சங்களுடன் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கும் வ.கெளதமன், பாராட்டுக்குரியவர்.

Comments (0)
Add Comment