Casting : S Kaarthieswaran, Sreenithi, Aadhavan, Livingston, Black Pandi, Mrithula Suresh, Akalya Venkatesan
Directed By :
S Kaarthieswaran
Music By : Srikanth Deva
Produced By :
D Radhakrishnan
நாயகன், பல வழிகளில் மோசடி செய்து ரூ.5 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார். அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு பறந்து விட நினைக்கும் போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் சிக்கிக் கொள்கிறார்.
போலீஸிடம் சிக்கிக் கொண்ட நாயகன், தப்பித்தாரா?, அவர் செய்த மோசடிகள் என்ன ? அதை அவர் எப்படி சாமர்த்தியமாக செய்கிறார், அவர் இப்படி செய்வதற்கு என்ன காரணம் ?, ஆகிய கேள்விகளுக்கான விடைதான் படத்தின் கதை!
படத்தை இயக்கியிருக்கும் எஸ்.கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அப்பாவி முகம், சாதுவான தோற்றம் என்று சாதாரணமாக வலம் வரும் கார்த்தீஸ்வரன் செய்யும் மோசடிகள் அனைத்தும், அருமை. அதே நேரம் அதிர்ச்சி. . கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் கார்த்தீஸ்வரன், பலவித கெட்டப்புகளில் தோன்றினாலும், அவற்றுக்கு பொருத்தமாக இல்லாதது சற்று வருத்தமளிக்கிறது. இருந்தாலும், ஒரு நடிகராக நடிப்பு, நடனம், காமெடி, ஆக்ஷன் என அனைத்தையும் சரியாகச் செய்திருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஸ்ரீநிதி அழகு!
கார்த்தீஸ்வரனின் மோசடி குழு உறுப்பினராக நடித்திருக்கும் ஆதவன் உட்பட அனைவரும் கொடுத்த வேலையை கரெக்ட்டாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் என்.எஸ்.ராஜேஷ், காட்சிகளை தரமாக படமாக்கியிருக்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் சூப்பர்!
படத்தொகுப்பாளர் சஜின்.சி, இயக்குநரின் வரிசைப்படி காட்சிகளை தொகுத்து கொடுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் நாயகன், மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் தருவதாக கூறி கார்ப்பரேட் நிறுவனம் மூலம் நடத்திய மோசடி முதல், கடைசியில் நடக்கும் ஆன்லைன் மோசடிகள் வரை, அனைத்தும் அதிர்ச்சி. .
பல வழிகளில், பலர் ஏமாற்றப்பட்டு வருவது தொடர்பாக செய்திகள் வெளியானாலும், மக்கள் ஏமாறுவது தொடர் கதைதான்! இதற்கு காரணம் என்ன என்பதை கமர்ஷியலாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர், இத்தகைய மோசடிகளில் சிக்காமல் இருக்க மக்கள் என்ன செய்ய வேண்டும், என்பதையும் சொல்லியிருக்கிறார்.
காட்சிகளை கையாண்ட விதம் ஆகியவற்றில் குறைகள் இருந்தாலும், தான் சொல்ல வந்ததை நேர்த்தியாகச் சொன்ன இயக்குநர், திரைக்கதையில் மட்டும் கொஞசம் கவனம் செலுத்தியிருந்தால், நிச்சயம் இன்னொரு சதுரங்க வேட்டையாக இருந்திருக்கும்!