இயக்குனர் நந்தா பெரியசாமி
திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘திரு. மாணிக்கம்’ திரைப்படததின் திரைக்கதை வடிவம் புத்தகமாக வெளியிடப்பட்டது. இதில், தமிழ்த் திரைப்பட சங்க துணைத் தலைவர் கமலக்கண்ணன், செயலாளர் கதிரேசன், மற்றும் இயக்குனர் நடிகர் சமுத்திரகனி, நடிகர் ரவி மரியா, அந்தப் படத்தின் இயக்குனர் நந்தா பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த வெளியீட்டு விழா பற்றி, இயக்குனர் நந்தா பெரியசாமி,
“திரு.மாணிக்கம் புத்தகமாக இன்று உங்கள் கைகளில் வந்து சேர்ந்திருக்கிறார். சமுத்திரக்கனி அண்ணா, ஊர்வசி, செல்வி அர்ச்சனா, சேரன் சார், ரவிமரியா, தயாரிப்பாளர் five star கதிரேசன், தயாரிப்பாளர் கமலக்கண்ணன், தயாரிப்பாளர் முத்துக்குமார், இயக்குநர் M.R. பாரதி, இயக்குநர்
EV கணேஷ்பாபு, மாஸ்டர் மகேந்திரன், பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன், காதல் சுகுமார், எழுத்தாளர் சோம.வள்ளியப்பன், சண்டை பயிற்சியாளர் ராம், EPஆண்டனி சார், எழுத்தாளர் கரிகாலன், எழுத்தாளர் பாரதிகுமார், எழுத்தாளர் கல்யாணிஶ்ரீதர், முனைவர் ஞா.சந்திரன், இசையமைப்பாளர் சித்து குமார், நடிகர் முருகா அசோக், ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயன் என என்னுடைய நலம் விரும்பிகளின் வருகையோடு, இந்த விழா, சிறப்புற்றதில் நான் மிகவும் மகிழ்கிறேன். இயற்கைக்கு நன்றி” என்று தன் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.